Cinema History
சினிமாவில் இருக்கும் யாரும் நல்ல நடிகர்கள் இல்லை!.. ஓப்பனாக கூறிய நாசர்!..
தமிழ் சினிமா பல கலைஞர்களை வாழவைக்கிறது அதே சமயம் பல கலைஞர்கள் நல்ல நடிகர்களாக இருந்தும் கூட தமிழ் சினிமாவில் பெரிதாக வரவேற்பை பெறுவதில்லை.
சிலர் இறுதிவரை நடிப்பதற்காக போராடி தோற்றும் போகின்றனர். உதாரணத்திற்கு நடிகர் எம் எஸ் பாஸ்கரை சொல்லலாம். எம்.எஸ். பாஸ்கர் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருக்கிறார். அவர் ஒரு சிறந்த நடிகரும் கூட, அவர் தனது வாழ்வின் கடைசியில்தான் சினிமாவில் வாய்ப்பை பெற்றார்.
50 வயதிற்கும் மேல் ஆன பிறகுதான் எங்கள் அண்ணா திரைப்படத்தில் வந்த ஒரு காமெடி மூலம் கொஞ்சமாக பிரபலமானார். அதன் பிறகு அவருக்கு சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் வந்து தற்சமயம் அவரது நடிப்பை நிரூபிக்கும் அளவிலான சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அதில் டானாகாரன் திரைப்படம் முக்கியமான திரைப்படம். இப்படி இருக்கும் பொழுது சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே சிறந்த நடிகர்கள் என்று கூறுகிறார் நடிகர் நாசர்.
பொதுவாக இரண்டு பக்க வசனங்களைக் கூட நாடகத்தில் நடிப்பவர்கள் தெளிவாக மனப்பாடம் செய்து பேசி விடுவார்கள் ஆனால் சினிமாவிற்கு நடிக்க வருபவர்கள் அப்படி இல்லை அவர்களுக்கு சின்ன சின்ன வசனங்கள் கூட கடினமாக உள்ளது எனவே பெரும்பாலும் சிறப்பாக நடிக்கும் பல நடிகர்கள் நாடகத் துறையில் தான் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் நாசர்.
அதேபோல பழைய சினிமா காலங்களில் நாடகத்தில் நடிக்கும் நடிகர்களைதான் பெரும்பாலும் சினிமாவில் நடிப்பதற்கு தேர்ந்தெடுத்தார்கள். ஏனெனில் அப்பொழுது பிலிம் ரோலை வைத்து படம் இயக்கும் காலம் என்பதால் தவறான காட்சிகளை திரும்பத் திரும்ப எடுத்தால் அது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும் எனவே தான் அப்போதிலிருந்து நாடக சினிமா நடிகர்களுக்கு ஒரு மதிப்பு இருந்து வந்துள்ளது.