நடிகர் பிரசாந்த் ஹரி கூட்டணியில் அடுத்த படம்.. வெளிவந்த புது அப்டேட்..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என பரவலாக அழைக்கப்பட்ட நடிகர்களில் நடிகர் பிரசாந்தும் ஒருவர். முதல் படத்திலேயே எக்கச்சக்க வரவேற்பை பெற்ற பிரசாந்த் அந்த காலக்கட்டத்தில் விஜய் அஜித்தை விடவும் அதிக புகழ்பெற்றவராக இருந்தார்.

ஆனால் ஆக்‌ஷன் திரைப்படங்களுக்கு அதிக மார்க்கெட் கிடைக்க துவங்கிய பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது குறைய துவங்கியது. அதற்கு பிறகு நடிகர் பிரசாந்துக்கு பெரிதாக மார்க்கெட் என்பதே இல்லாமல் போனது. ஆனாலும் அவ்வபோது மம்பட்டியான், அந்தகன் மாதிரியான திரைப்படங்களில் அவர் நடித்த வண்ணம்தான் இருந்தார்.

prasanth

Social Media Bar

இந்த நிலையில் அந்த படங்களும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து அடுத்ததாக வெற்றி இயக்குனர் ஹரி கூட்டணியில் அடுத்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார் பிரசாந்த். அந்த படத்திற்கான திரைக்கதை வேலைகளை இருவரும் துவங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.