உங்களுக்கு அவ்வளவுதான்! – படக்குழுவை எச்சரித்த விஜய்

நடிகர் விஜய் தற்சமயம் நடித்து பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் வாரிசு. இது குடும்ப கதை என்பதால் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. ஏனெனில் சமீப காலமாக விஜய் பெரிதாக எந்த குடும்ப கதையிலும் நடிக்கவில்லை.

மேலும் துணிவிற்கு போட்டியாக வாரிசு வெளியாவதால் அதற்கு தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய் பாடிய ரஞ்சிதமே என்கிற பாடல் நேற்று இணையத்தில் லீக் ஆகிவிட்டது. இந்த பாடலை பெரிய அளவில் வெளியிட வேண்டும் என திட்டமிட்டிருந்தாராம் விஜய். அந்த லீக் செய்யப்பட்ட காட்சியில் வீடியோ மேலே இருந்து எடுக்கப்பட்டிருந்தது.

லைட்ஸ் மேன் ஊழியர்கள்தான் அந்த இடத்தில் இருந்துள்ளனர். எனவே விஜய் அவர்களிடம் சென்று இதைப்போல் இனி யாரும் செய்யக்கூடாது என அனைவரையும் எச்சரித்துள்ளாராம். 

மேலும் இனி பட வேலைகள் நடக்கும்போது முக்கியமான ஆட்களை தவிர வேறு யாரும் படப்பிடிப்பு தளத்தில் இருக்க கூடாது என விஜய் கண்டிப்பாக கூறிவிட்டாராம்.

Refresh