என் அம்மாவுக்கும் அஜித்துக்கும் இருந்த தொடர்பு… நடிகை பாவனா ஓப்பன் டாக்.!
தமிழ் சினிமாவில் தீபாவளி, ஜெயம் கொண்டான் மாதிரியான திரைப்படங்களில் நடித்து அதன் மூலமாக அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை பாவனா.
பாவனா தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து அவருக்கு அதிக வரவேற்பு என்பது இருந்து வந்தது. ஆனால் போக போக அவருக்கான வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது.
இந்த நிலையில் தமிழில் பெரிய நட்சத்திரங்களுடன் பாவனா ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்படியாக அவர் நடித்த திரைப்படங்களில் அசல் முக்கியமான திரைப்படமாகும்.
அசல் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார் பாவனா. ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் பாவனாவின் அம்மாவிற்கும் அஜித்துக்கும் இடையே உள்ள உறவு குறித்து பாவனா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
அதில் அசல் படத்தின் படப்பிடிப்பு நடந்த கால கட்டத்தில் இருந்து அஜித் என்னுடனும் எனது தாயாரிடமும் மிகவும் அன்பாக பேசுவார். அதனாலேயே எனது தாயாருக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும்.
எனது தாய்க்கு தமிழே தெரியாது. மலையாளம் மட்டும் தான் தெரியும் இருந்தாலும் கூட அஜித்தும் எனது அம்மாவும் வெகு நேரங்கள் பேசிக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர் அஜித் என்று கூறி இருக்கிறார் பாவனா.