News
பாலியல் பிரச்சனைகளை சந்திச்சிருக்கேன்?.. இயக்குனர்கள் பெண்கள்கிட்ட.. உண்மையை கூறிய நடிகை கௌரி கிஷான்.!
96 திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை கௌரி கிஷான். கௌரி கிஷான் 96 திரைப்படத்தில் பள்ளி த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
திரிஷாவை விடவும் அவருக்கு அதிகமாக மக்கள் விரும்பும் வகையில் இயக்குனர் கௌரி கிஷானை மிக க்யூட் ஆக திரைப்படத்தில் காட்டி இருப்பார்.
அதற்கு பிறகு தமிழில் நிறைய திரைப்படங்களில் கௌரி கிஷானுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு அவரது நடிப்பில் குறிப்பிட்டு சொல்லும் திரைப்படம் என்றால் மாஸ்டர் திரைப்படத்தை சொல்லலாம். அதனை தொடர்ந்து கதாநாயகியாகவும் நடிக்க துவங்கியிருக்கிறார் கௌரி கிஷான்.
தொடர்ந்து பட வாய்ப்புகள்:
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் எல்.ஐ.சி திரைப்படத்தில் கதாநாயகியாக கௌரி கிசான் நடித்து வருகிறார் இது இரண்டு கதாநாயகிகளை கொண்ட கதை ஆகும்.
இன்னொரு கதாநாயகியாக அதில் கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார் இந்த நிலையில் பாலியல் பிரச்சனைகள் அதிகமாக கேரளாவில் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து கௌரி கிஷானிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கௌரி கிஷான் கூறும் பொழுது நேரடியாக நான் பாலியல் பிரச்சனைகள் எதையும் சந்தித்தது கிடையாது என்றாலும் நிறைய நடிகைகள் சந்தித்ததை என்னிடம் கூறி இருக்கிறார்கள்.
ஆனால் பாலினம் சார்ந்த பிரச்சினைகள் என்பது சினிமாவில் இருக்க தான் செய்கிறது. ஏனெனில் ஏதாவது ஒரு தவறை நாம் இயக்குனரிடம் கூறினால் ஆண்கள் கூறும் பொழுது பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி ஏதாவது கூறினோம் என்றால் அதற்கு மிகுந்த கோபம் அடைவார்கள் இயக்குனர்கள் அதை நான் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன் என்று கூறுகிறார் கௌரி கிஷான்.
