Latest News
தமிழ் சினிமாவிலேயே எனக்கு நடந்த அந்த மாயாஜாலம் யாருக்குமே நடந்தது இல்லை.. ஜோதிகா பகிர்ந்த சீக்ரெட்!..
Actress Jyothika: தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு நடிகையாக இருந்த சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஜோதிகா. ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் அவருக்காகவே ஓடின என கூறலாம். இதனால் வெகு சீக்கிரத்திலேயே ஜோதிகா அஜித்,விஜய்,சூர்யா, மாதவன் என அப்போது இருந்த பெரும் நடிகர்களோடு நடித்தார்.
பொதுவாக கதாநாயகர்களாக இருந்தாலும் சரி கதாநாயகிகளாக இருந்தாலும் சரி தொடர்ந்து நடித்து கொண்டிருந்தால்தான் அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் இருந்துக்கொண்டே இருக்கும். சிறிது காலம் நடிக்காமல் இருந்தால் கூட அவர்களுக்கு வரவேற்பு குறைந்துவிடும்.
![](https://cinepettai.com/wp-content/uploads/2023/12/jyothika1.jpg)
இதுக்குறித்து ஜோதிகா ஒரு பேட்டியில் கூறும்போது எனக்கு மட்டுமே சினிமாவில் நடந்த ஒரு மாயாஜலம் என சில விஷயங்கள் உண்டு. நான் எத்தனை வருடம் இடைவெளி விட்டு நடித்தாலும் எனது திரைப்படத்தை ரசிகர்கள் பார்க்கின்றனர்.
இதனால் மற்ற கதாநாயகிகளை போல எப்போதும் சினிமாவில் நான் போட்டி போட்டு நடிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. அதே சமயம் எப்போது வந்தாலும் சினிமா எனக்கு வாய்ப்பை அளித்துக்கொண்டேதான் இருக்கிறது. காக்க காக்க திரைப்படத்தில் ஒரு பாடலில் She is a Fantasy என வரும். அது எனது வாழ்வை பொறுத்தவரை உண்மை என்றே நினைக்கிறேன்.
![](https://cinepettai.com/wp-content/uploads/2023/10/logolow-4.png)