தென்னிந்தியாவில் தமிழ் தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை சாய் பல்லவி. பெரும்பாலும் சாய் பல்லவி நடிக்கும் திரைப்படங்களில் அவருக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்கள் இருந்தால் மட்டுமே அந்த படங்களில் அவர் நடிப்பதை பார்க்க முடியும்.
இதை ஒரு பேட்டியில் சாய்பல்லவியே கூறியிருக்கிறார். பிரேமம் திரைப்படம் மூலமாக தென்னிந்தியாவில் பிரபலமடைந்த சாய் பல்லவிக்கு தமிழில் மாரி 2 திரைப்படம் மூலமாக அதிக வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பிறகு அவர் நடித்த கார்கி என்கிற திரைப்படம் அவரது மார்க்கெட்டை தமிழில் இன்னமும் அதிகரித்தது.
சாய் பல்லவி கூறிய பதில்:
இந்த நிலையில் தற்சமயம் அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சாய் பல்லவி. சமீபத்தில் அவர் ஒரு விழாவில் கலந்து கொண்டு அவர் பேச துவங்கிய பொழுது ரசிகர்கள் அதிகமாக சத்தம் போட்டனர்.
அப்பொழுது அங்கிருந்த தொகுப்பாளர் ரசிகர்கள் உங்களுக்கு தொடர்ந்து அன்பு தொல்லை கொடுத்து வருகின்றனர் என்று கூறினார். அதற்கு பதில் அளித்த சாய் பல்லவி ரசிகர்களின் அன்பை தொல்லை என்று கூறாதீர்கள் அது தொல்லையே கிடையாது. இந்த மேடையில் வந்து நின்றால்தான் அது எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பது தெரியும் என்று கூறியிருக்கிறார்.