News
KVK பார்த்து அதிர்ச்சியான அஜித்..! – தொங்கலில் விக்னேஷ் சிவன்!?
நடிகர் அஜித் தமிழின் மிக முக்கியமான நடிகர். இன்று விஜய்க்கு அடுத்தபடியாக அஜித் இருக்கிறார். இப்போழுது அஜித் 61, இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஹைதரபாத்தில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது.
இந்த படத்திற்காக மிகப்பெரும் பிரம்மாண்ட செலவில் 9 ஏக்கர் அளவில் மிகப்பெரும் செட் ஒன்று போடப்பட்டுள்ளது. இது ஒரு பேங்க் செட் என பரவலாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இது ஒரு பேங்க் திருட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.

வலிமை படத்தின் மிகப்பெரும் தோல்விக்கு பிறகு ஹெச்.வினோத்தும், அஜித்தும் இத்திரைப்படத்தில் இணைவதால் இப்படம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும் என்று இரண்டு தரப்பிற்குமே நெருக்கடி உள்ளது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், அஜித் 62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. எப்பொழுதும் ஒரு படம் முடிந்தபிறகே அடுத்தபடத்தின் அறிவிப்பை வெளியிடுவதே அஜித்தின் வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அஜித் 61ன் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும்பொழுதே அஜித் 62 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்துடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் வெளியாகியது. இப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. மிகப்பெரும் வெற்றியடையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியானது முதல் மிக மோசமான கருத்தினை மக்களிடமிருந்து பெற்று வருகிறது.
இது விஜய் சேதுபதி தரப்பினை மிக கவலையாக்கியோதோடு, அஜித் ரசிகர்களிடமும் கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. பல அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர். இது அஜித் தரப்பிலும் சில கேள்விகளை உருவாக்கியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தோல்வியடைந்தபோது நெல்சன் இயக்கத்தில் ரஜினி இயக்கவிருந்த திரைப்படமும் நடைபெறுமா என்ற கேள்வி உருவாகியது. பலத்த சிபாரிசுகளுக்கு பிறகு மீண்டும் நெல்சன் ரஜினி பட வேலைகள் நடைபெற்று வருகிறது. ஒருவேளை விக்னேஷ் சிவன் – அஜித் படத்திற்கும் ஏதேனும் மாற்றங்கள் நிகழலாம் என்று பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன. இதில் சிறுத்தை சிவாவும் அஜித்தின் கால்ஷீட்டை பெற கடுமையாக போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
