News
பீஸ்ட் தியேட்டரில் அஜித்துக்கு கட் அவுட்! – அஜித் ரசிகர்கள் செய்த காரியம்!
விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாகியுள்ள தியேட்டரில் அஜித்துக்கு கட் அவுட் பேனர் வைக்கப்பட்டுள்ளது வைரலாகியுள்ளது.

நடிகர் விஜய் நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. காலை 4 மணிக்கே ரசிகர் மன்ற காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வைரலாகியுள்ளது.
பொதுவாக அஜித், விஜய் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் தங்களுக்குள் வாக்குவாதம் செய்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை பீஸ்ட் வெளியான திரையரங்கில் அஜித், விஜய் இருவரும் உள்ள பேனரை வைத்துள்ளனர் அஜித் ரசிகர்கள்.

தல-தளபதி ஃபேன்ஸ் க்ரூப் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு அஜித் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
தளபதி டான்ஸ் வேறலெவல்.. வெறித்தனம்! – இந்த வீடியோவ பாருங்க..!
