தல படத்தின் காபிதான் லியோ!.. பொங்கும்  அஜித் ரசிகர்கள்!..

விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. வருகிற 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று அந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

லியோ படத்தின் டிரைலரை பொறுத்தவரை மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முக்கியமாக இந்த திரைப்படம் விக்ரம் திரைப்படத்தோடு தொடர்புடையதாக இருக்குமா? என்கிற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது.

ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இதுவரை யாரும் யோசிக்காத வகையில் கதை இருப்பதை ட்ரைலரில் பார்க்க முடிந்தது. இரண்டு விஜய் கதாபாத்திரம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு விஜய் கெட்டவன் என்றும் அந்த விஜய் என்று நினைத்துக் கொண்டு இன்னொரு விஜய்யை ரவுடிகள் துரத்துவது போலவும் கதை அமைந்துள்ளது இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் ஏற்கனவே இரண்டு முறை தமிழில் வெளிவந்த பில்லா திரைப்படத்தின் கதைதான் இது. அதையே கொஞ்சம் மாற்றி லோகேஷ் கனகராஜ் லியோ என்று எடுத்துள்ளார் என்று கூறி வருகின்றனர்.

ஆனால் அதற்கு முன்பு எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் கதையும் அதேதான், தமிழில் இந்த மாதிரி கதை அம்சத்தில் நிறைய இரட்டை வேடங்கள் படம் வந்துள்ளது. என பதிலளித்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.