அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்கனுமா..? மாட்டேன்! – மறுத்த அல்லு அர்ஜுன்!

தெலுங்கில் பிரபலமான ஸ்டார் நடிகராக இருந்து வருபவர் அல்லு அர்ஜுன். தெலுங்கில் இவர் நடித்த அலவைகுந்த புரமுலோ உள்ளிட்ட படங்கள் பெரும் ஹிட் அடித்தவை.

சமீபத்தில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் பேன் இந்தியா படமாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஆரம்பத்தில் தெலுங்கில் மட்டுமே அல்லு அர்ஜூனுக்கு ரசிகர்கள் இருந்து வந்த நிலையில் தற்போது மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

படம் தவிர அல்லு அர்ஜுன் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த டாக்சி பைக் விளம்பரம் கூட ரொம்ப பேமஸ்

கைவிட்ட சமந்தா; விலகும் நயன்தாரா..? – கவலையில் விக்னேஷ் சிவன்!

இந்நிலையில் பான் மசாலா கம்பெனி விளம்பரத்தில் நடிக்க அல்லு அர்ஜுனை அணுகியுள்ளனர். ஆனால் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் சார்ந்த விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என அல்லு அர்ஜுன் மறுத்து விட்டாராம்.

Refresh