Latest News
கொஞ்ச நேரம் வாயை மூடுடா!.. கோட் படப்பிடிப்பில் இயக்குனரை தளபதியிடம் கோர்த்துவிட்ட வைபவ்!..
Vijay GOAT: தமிழில் உள்ள இயக்குனர்களிலேயே மிகவும் ஜாலியான ஒரு இயக்குனர் என்றால் அது இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள்தான். வெங்கட் பிரபு வரும் நிகழ்ச்சிகளை பார்த்தாலே பலருக்கும் அது தெரிந்திருக்கும் அந்த நிகழ்ச்சிகளில் கூட ஒரு இயக்குனர் என்கிற எந்த ஒரு அகங்காரமும் இல்லாமல் மிகவும் சாதாரணமாக பேசி விளையாடிக் கொண்டிருப்பார் வெங்கட் பிரபு.
இதனாலையே வெங்கட் பிரபுவிற்கு என்று தனியாக ரசிக்கப்பட்டாளமும் உண்டு. அவர் எடுக்கும் திரைப்படங்களும் அப்படிதான் இருக்கும். வெங்கட் பிரபுவிற்கு எப்படி விஜய் திரைப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது என்பது பலருக்கு ஆச்சரியமான விஷயமாகவே இருக்கிறது ஏனெனில் விஜய்யை பொருத்தவரை அவர் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் டெரராக இருக்கக்கூடிய ஒரு ஆள்.
அவ்வளவு நகைச்சுவையாக எல்லாம் படப்பிடிப்பில் விஜய் பேச மாட்டார் என்று சிலர் கூறியிருக்கின்றனர். ஆனால் வெங்கட் பிரபு கூட்டத்துடன் சேர்ந்த பிறகு விஜய்யும் ஜாலியாக மாறிவிட்டார் என்பதை வைபவ் சொன்ன ஒரு நிகழ்ச்சியின் மூலமாக தெரிந்திருக்கிறது.
வைபவ் கோட் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதில் ஒரு காட்சி படமாக்கப்படும் பொழுது கதையின் படி எனக்கு ஏற்கனவே வைபவை தெரியுமா தெரியாதா என்று விஜய் வெங்கட் பிரபுவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதை வைபவும் திருத்திருவென்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது விஜய்யிடம் விளக்கிய வெங்கட் பிரபு ஆமாம் உங்களுக்கு ஏற்கனவே வைபவை தெரியும் அப்படியாக தான் இந்த காட்சியில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் வைபவை அழைத்த விஜய் ஏன் திரு திருவென்று விழிக்கிறாய் என கேட்டப்பொழுது உங்களுக்காவது கதை தெரியும் அதனால் ஏதோ கேட்கிறீர்கள் எனக்கு கதையே என்னவென்று தெரியாது என்று கூறியிருக்கிறார்.
உடனே விஜய் சிரித்துக் கொண்டே வெங்கட் பிரபுவை அழைத்து இவனுக்கு கதையே தெரியாதா என்று கேட்டிருக்கிறார். அதற்கு வெங்கட் பிரபு கொஞ்ச நேரம் வாயை மூடிகிட்டு சும்மா இருடா என்று வைபவை திட்டி இருக்கிறார் இந்த சம்பவத்தை வைபவ் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.