News
அந்த 14 பேரோட என் உறவு.. மதுரைல இருக்க இதுதான் காரணம்.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் சசிக்குமார்.!
தமிழ் சினிமாவில் கிராமம் சார்ந்த படங்களை அதிகமாக இயக்கி மக்கள் மத்தியில் தனக்கென தனிப்பட்ட இடத்தை பிடித்துக் கொண்டவர் நடிகர் சசிகுமார். ஒரு இயக்குனராக சசிகுமார் அனைவராலும் அறியப்படுவதை விடவும் ஒரு நடிகராகதான் அவரை பலருக்கும் தெரியும்.
அவர் இயக்கிய திரைப்படங்களில் சுப்ரமணியபுரம் மாதிரியான சில திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை என்று கூறலாம். அந்த அளவிற்கு பிரபலமானவர் நடிகர் சசிகுமார்.
ஆனால் தாரை தப்பட்டை திரைப்படத்திற்கு பிறகு சசிகுமார் கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டார். அது அவரை தற்கொலைக்கு தூண்டியது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் சினிமாவே வேண்டாம் என்று நினைத்த சசிகுமார் சில நாட்கள் சினிமாவை விட்டு தனது குடும்பத்தாருடன் மதுரையில் வசித்து வந்தார்.
மதுரையில் செட்டில்:
தற்சமயம் மீண்டும் சினிமாவில் வந்து நடித்துக் கொண்டிருந்தாலும் சென்னையில் இருக்கும் அவரது அலுவலகத்தையே அவர் மதுரைக்கு மாற்றிவிட்டார். எனவே நடிப்பதற்கு மட்டுமே சென்னைக்கு வருவது என்று வருகிறார்.
இந்த நிலையில் பேட்டியில் அவர் கூறும் பொழுது என்னுடைய குடும்பம் ஒரு கூட்டு குடும்பம் மிகவும் பெரிய குடும்பம் எப்படியும் ஒரு 16 பேர் அந்த குடும்பத்தில் இருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து வருகிறேன்.
படத்தில் நடிப்பதற்கு மட்டும்தான் நான் சென்னைக்கு வருகிறேன் என்று கூறியிருக்கிறார் சசிகுமார். மேலும் அவர்கள் இருப்பதால்தான் இப்பொழுது என்னால் வாழ முடிகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சினிமாவால் ஒரு கட்டத்தில் பெரும் தோல்வியை கண்டிருந்தாலும் கூட சசிகுமார் தனது குடும்பத்தின் மூலமாக திரும்பவும் நல்ல வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டார் என்று இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
