Cinema History
மனுசனுக்கு டச் விட்டு போயிருக்கும்னு நினைச்சேன்! வெறித்தனமான செஞ்சிட்டாப்ள! – தேவா குறித்து கூறி அனிரூத்.
தமிழ் திரையுலகில் பிரபலமான பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என இருமுக தன்மை கொண்டவர் இசையமைப்பாளர் தேவா. இப்போதும் அரசு பேருந்துகளில் சென்றோம் என்றால் அதிகமாக தேவா பாடலை கேட்க முடியும்.
அவர் பாடிய பல பாடல்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால் இப்போதைய காலக்கட்டத்திற்கு தேவாவிற்கு பாடுவதற்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் இசையமைப்பாளர் அனிரூத் தேவாவின் ரசிகர் என கூறலாம். எனவே தான் இசையமைக்கும் பாடலுக்கு தேவா பாடல் பாட வேண்டும் என ஆசைப்பட்டார் அனிரூத்.
எனவே இதுக்குறித்து தேவாவிடம் பேசலாம் என நினைத்துள்ளார். ஆனால் தேவா பாடல்கள் பாடி பல வருடங்கள் ஆகின்றன. எனவே இப்போது அவர் நன்றாக பாடுவாரா? என்கிற சந்தேகத்தோடு தேவாவை சந்தித்துள்ளார்.
பாடல் பாட வேண்டும் என கேட்டதுமே தேவா சரி என கூறிவிட்டார். சிவகார்த்திகேயன் நடித்து வெளியான மான் கராத்தே படத்தில் தேவாவை வைத்து ஓப்பன் த டாஸ்மார்க்கு என்கிற பாடலை உருவாக்கியிருந்தார் அனிரூத்.
அந்த பாடல் பெரும் வெற்றியை பெற்றது. இதுக்குறித்து அனிரூத் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.