ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்ததாம்! – நல்ல கதாபாத்திரத்தை நழுவ விட்ட கதாநாயகன்!

தமிழில் அதிக அளவு திரையில் ஓடி வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் திரைப்படம் விக்ரம், கமல், விஜய் சேதுபதி, நரேன், பகத் ஃபாசில் என பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து படத்தை வெற்றி பெற செய்தது.

ஆனால் படம் முழுக்க வந்த நடிகர்களை விடவும் க்ளைமேக்ஸில் ஒரு சில நிமிடங்களே வந்த ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது. அடுத்து விக்ரம் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் ரோலக்ஸ்தான் கமலுக்கு முக்கிய எதிரியாக இருக்க போவதாக கூறப்படுகிறது.

இதனால் சூர்யாவிற்கும் இது முக்கியமான படமாக அமைந்தது. ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது சூர்யா இல்லையாம். லோகேஷ் கனகராஜ் இந்த கதாபாத்திரத்தை விக்ரமிடம்தான் கொண்டு சென்றுள்ளார்.

அந்த கதாபாத்திரத்தை கேட்ட விக்ரமிற்கு அதிருப்தியாக இருந்தது. ஏனெனில் மிக மோசமான ஒரு கதாபாத்திரமாக ரோலக்ஸ் வடிவமைக்கப்பட்டிருந்தது. எனவே அதில் நடித்தால் பிறகு கதாநாயகனாக நடிப்பது சிரமமாகிவிடும் என கூறி அந்த வாய்ப்பை தவிர்த்துவிட்டாராம் விக்ரம்.

ஆனால் விக்ரம் நடித்திருந்தால் அந்த காட்சி இன்னமும் சிறப்பாக இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Refresh