வெளியானது ஆண்ட் மேன் குவாண்டமேனியா ட்ரைலர் – தேர இழுத்து தெருவில விட்ட கதையா போச்சு !

இந்திய ரசிகர்களில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்க்கு தனி ரசிக பட்டாளம் உண்டு. இந்த ரசிக பட்டாளத்தில் உள்ளவர்கள் அனைத்து மார்வெல் திரைப்படங்களையும் கண்டிப்பாக திரையரங்குகளில் பார்ப்பார்கள்.

தற்சமயம் மார்வெல்லின் அடுத்த படமான ஆண்ட் மேன் அண்ட் த வாஸ்ப் குவாண்டமேனியா என்கிற திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆண்ட் மேன் இரண்டு பாகங்கள் வந்துள்ளன. இந்த படம் சற்று நகைச்சுவையான கதாநாயகனை கொண்டிருப்பதாலேயே இந்த படத்திற்கு மக்களிடையே வரவேற்பு இருந்து வருகிறது.

குவாண்டம் எனப்படும் அணுவை விட சிறிய விஷயங்களை மையமாக கொண்டு செல்லும் திரைப்படம் ஆண்ட் மேன். தற்போது வெளியான குவாண்டமேனியா படத்தின் ட்ரைலரின்படி, சும்மா இல்லாமல் ஒரு பெண் குவாண்டம் உலகிற்கு சிக்னல் அனுப்ப அதனால் ஆண்ட் மேன் மற்றும் அவரது நண்பர்கள் குவாணடம் உலகில் மாட்டி கொள்கின்றனர். 

குவாண்டம் உலகை பொறுத்தவரை அங்கு 1 மணி நேரம் இருந்தாலே சாதரண உலகில் அந்த நேரத்தில் நான்கு வருடங்கள் முடிந்திருக்கும். எனவே குவாண்டம் உலகில் மாட்டிக்கொண்ட ஆண்ட் மேன் திரும்ப எவ்வளவு சீக்கிரம் வெளிவருகிறார் என்பதே கதையாக இருக்கும் என யூகிக்கப்படுகிறது.

ட்ரைலரை காண க்ளிக் செய்யவும்.

Refresh