Connect with us

அஜித் படத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி ! – வில்லன் கதாபாத்திரமாக இருக்குமா?

Latest News

அஜித் படத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி ! – வில்லன் கதாபாத்திரமாக இருக்குமா?

cinepettai.com cinepettai.com

அஜித் நடிப்பில் தற்சமயம் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் துணிவு. அஜித்தை விட இந்த படம் குறித்து இயக்குனர் ஹெச்.வினோத்துதான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் வாரிசு படத்திற்கு போட்டியாக வருகிற ஜனவரி 11 அன்று வெளியாக இருக்கிறது. இந்த இரண்டு திரைப்படங்களின் டீசரும் தற்சமயம் இணையத்தில் வலம் வந்து கொண்டுள்ளன.

இந்த நிலையில் துணிவு படத்திற்கு அடுத்ததாக அஜித் நடிக்கும் அடுத்த படம் ஏ.கே 62. இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த படத்தில் யார் கதாநாயகி என்பது இன்னும் சந்தேகமாக உள்ளது.

இந்நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில படங்களில் வில்லனாக நடித்து தற்சமயம் பிரபலமாக உள்ளார் அரவிந்த் சாமி. எனவே இந்த படத்திலும் இவர் அஜித்க்கு வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

அதே போல நடிகர் சந்தானமும் கூட இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. கதாநாயகனாக மாறிய பிறகு நடிகர் சந்தானம் காமெடியனாக நடிப்பதில்லை. எனவே இந்த படத்தில் இவருக்கு காமெடி கதாபாத்திரம் இருக்காது என கூறப்படுகிறது.

POPULAR POSTS

prakash-raj-1
oru nodi poster
kamal vishal
mansoor alikhan modi
vijay nelson
dinesh master vijay
To Top