Latest News
கவர்ச்சியில் சமந்தாவை மிஞ்சிய கீர்த்தி ஷெட்டி.. எல்.ஐ.சி போஸ்டரை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்.. ஹாலிவுட் லெவல்ல இருக்கே!.
மிகக் குறுகிய காலங்களிலேயே தென்னிந்தியாவில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி செட்டி. 17வது வயதிலேயே இவர் சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார்.
அவர் தெலுங்கில் நடித்த இப்பன்னா என்னும் திரைப்படம் தான் அவரது மார்க்கெட்டை முதன்முதலாக அதிகரித்த திரைப்படம் என்று கூறலாம். அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கீர்த்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடித்திருப்பார்.
பட வாய்ப்புகள்:
அதற்கு பிறகு கீர்த்தி ஷெட்டிக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. அதில் லிங்குசாமி இயக்கிய வாரியார் திரைப்படம் முக்கியமான படம் ஆகும். இந்த திரைப்படத்தில் புல்லட் என்கிற ஒரு பாடலில் அட்டகாசமாக நடனமாடி இருந்தார் கீர்த்தி ஷெட்டி.
அந்த பாடலை அடுத்து தென்னிந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார். அந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றதால் டி.எஸ்.பி திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விஜய் சேதுபதி அப்போதே அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
ஏனெனில் உப்பனா திரைப்படத்தில்தான் அவருக்கு அப்பாவாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. திரும்ப அவரே எப்படி ஜோடியாக நடிக்க முடியும் என்பது அவருக்கு உறுத்தலான விஷயமாக இருந்தது.
அதனால் விஜய் சேதுபதி இதற்கு ஒப்பு கொள்ளவில்லை. தொடர்ந்து ஒரு காதல் சப்ஜெக்டில் கீர்த்தி ஷெட்டியை தமிழ் சினிமா எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அதேபோல தற்சமயம் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தமிழில் முதல் படம்:
இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார் லவ் டுடே திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இதனை அடுத்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்திருக்கிறது.
பிரதீப் ரங்கநாதன் என்கிற காம்போவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருப்பதால் விக்னேஷ் சிவனின் இந்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் போல இல்லாமல் அதிக ஆர்வத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கீர்த்தி ஷெட்டி சமீபத்தில் எல்.ஐ.சி திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கீர்த்தி ஷெட்டி குட்டை பாவாடை போட்டு வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று பயங்கர ட்ரெண்ட் ஆகி வருகிறது. படத்தில் அவர் கவர்ச்சியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படம் போஸ்டர் பார்ப்பதற்கு வெளிநாட்டு பார்பி படத்தின் போஸ்டர் போல இருக்கிறது அதற்கு தகுந்தார் போல கதை இருக்குமா? ஒரு வேலை இந்த படம் எதிர்காலத்தில் நடக்கும் கதையாக இருக்குமா? என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.