
தமிழில் வெகுகாலமாகவே அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டும் என்கிற ஆவல் இருந்து வந்தது. எம்.ஜி.ஆரில் துவங்கி பலருக்கும் சாத்தியப்படாத இந்த விஷயத்தை இயக்குனர் மணி ரத்னம் அவர்கள் சாத்தியப்படுத்தியுள்ளார்.

மேலும் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பல நட்சத்திரங்களையும் படத்தில் ஒன்றிணைத்துள்ளார். இதனால் இந்த படத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. வரிசையாக பான் இந்தியா படங்கள் 1000 கோடி வசூலை குவித்து வருகிறது. அந்த வரிசையில் பொன்னியின் செல்வனும் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் இந்த படம் எப்போது வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன. அதன்படி ஜூலை மாதம் படத்தின் டீசர் வெளியாக உள்ளது, ஆகஸ்ட் மாதம் படத்தின் பாடல்கள் வெளியாகும், செப்டம்பரில் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவில் முக்கியமான இடத்தை பொன்னியின் செல்வன் பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.