சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல் –  ரோலக்ஸ்கே ரோலக்ஸ் வாட்ச்சா..!

நடிகர் கமல்ஹாசன் நடித்து , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் வெளியான திரைப்படம் விக்ரம். படம் அதிரிபுதிரியான ஓட்டத்தை கண்டுள்ளது. நான் நினைத்ததை விடவும் படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது என கமல் கூறியிருந்தார்.

ஏனெனில் இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் கமல்ஹாசன்தான் உள்ளார். எனவே படத்தின் வெற்றியால் அவருக்கு கிடைத்த மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் அளிக்க நினைத்தார். எனவே படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் நேற்று லோகேஷ் கனகராஜ்க்கு கார் ஒன்றை பரிசளித்தார் கமல். மேலும் உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் டிவி.எஸ் அப்பாச்சி பைக் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று விக்ரம் படத்தில் சிறப்பு கதாபாத்திரமாக தோன்றிய நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச்சை வாங்கி பரிசாக அளித்துள்ளார் கமல். அந்த வாட்சின் விலை கிட்டத்தட்ட 25 லட்சம் அல்லது அதைவிட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால் படத்தை பார்த்ததற்காக ஆண்டவர் நமக்கும் கூட பரிசுகள் கொடுப்பாரோ என ரசிகர்கள் நகைச்சுவை செய்து வருகின்றனர்.

Refresh