ஜோக்கர் அடுத்த பாகத்தின் வேலைகள் துவங்குமா? – இயக்குனர் விளக்கம்

ஹாலிவுட்டில் பேட்மேன் என்றாலே எல்லோருக்கும் நினைவு வருகிற கதாபாத்திரம் ஜோக்கர். ஜோக்கர் ஒரு விசித்திரமான கதாபாத்திரமாகும். மக்களுக்கு ஜோக்கர் கதாபாத்திரம் மீது இருக்கும் விருப்பத்தை பார்த்து ஜோக்கர் கதாபாத்திரத்திற்கு தனியாக ஜோக்கர் என்கிற பெயரிலேயே திரைப்படம் எடுக்கப்பட்டது.

2019 இல் வெளியான இந்த படம் ஹாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு ஆஸ்கார் விருதும் பெற்றது. இதையடுத்து இதற்கு அடுத்த பாகம் எடுக்கலாம் என முடிவு செய்தார் படத்தின் இயக்குனர் டாட் பிலிப்ஸ். வெகு நாட்கள் ஆன பிறகும் கூட இன்னும் ஜோக்கர் திரைப்படத்தின் அடுத்த பாகம் எடுப்பதற்கான வேலைகள் துவங்கியதாக தெரியவில்லை. எனவே ரசிகர்கள் விரக்தியில் இருந்தனர்.

இந்நிலையில் ஜோக்கர் திரைப்படத்தின் அடுத்த பாகத்தை இன்னும் சில நாட்களில் இயக்க போவதாக டாட் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். படத்தின் திரைக்கதை வேலைகள் இவ்வளவு நாள் சென்றதால் தாமதமாகிவிட்டதாகவும், தற்சமயம் அனைத்து திரைக்கதை வேலைகளையும் முடித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஜோக்கர் இரண்டாம் பாகத்திற்கு Joker: Folie à deux என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எனவே இன்னும் ஒரு வருடத்தில் ஜோக்கர் படத்தின் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கலாம் என ரசிக வட்டாரத்தில் பேச்சுக்கள் உள்ளன.

Refresh