Hollywood Cinema news
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசனை இழுத்து மூடலாம்னு இருக்கோம்! – தகவல் அளித்த நெட்ப்ளிக்ஸ்!
நெட்ப்ளிக்ஸ் தயாரிப்பில் வெளிவரும் பல பிரபலமான தொடர்களில் முக்கியமான தொடர் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ். வெளியானது முதலே உலக அளவில் இந்த சீரிஸ் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஹாக்கின்ஸ் என்னும் கிராமத்தில் நடக்கும் மர்மமான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது இந்த சீரிஸ். லெவன் எனப்படும் ஒரு சிறுமி இந்த கதையின் முக்கிய கதாபாத்திரமாக இருப்பார். அவருக்கு சிறப்பு சக்திகள் இருக்கும். அதை கொண்டு எப்படி இந்த மர்மங்களில் இருந்து மக்களை காக்க போகிறார் என்பதாக கதை செல்லும்.
இதன் நான்காவது சீசனில் இந்த மர்மங்களை செய்யும் முக்கிய நபரை கண்டுப்பிடித்து அவனை அழிப்பதற்கான திட்டங்களை நோக்கி சீரிஸ் செல்லும். நான்காம் சீசன் இறுதியில் மொத்த கிராமமும் வில்லனின் பிடியில் சிக்கி கொள்வதோடு கதை முடியும்.
இந்த நிலையில் போன வருடம் மொத்த சீசனும் தமிழ் டப்பிங்கில் வெளியானது. எனவே தமிழ் ரசிகர்களிடமும் கூட இந்த சீரிஸ் பிரபலமானது. தற்சமயம் இதன் ஐந்தாவது சீசனுக்காக அனைவரும் காத்துக்கொண்டுள்ளனர்.
நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும் ஐந்தாவது சீசனை எடுத்து வருகிறது. இந்நிலையில் தற்சமயம் வந்த அறிவிப்பின்படி ஐந்தாவது சீசன் அடுத்த வருடம் வெளியாகும். இதுதான் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸின் இறுதி சீசனாக இருக்கும் என அறிவித்துள்ளது நெட்ப்ளிக்ஸ்.