Hollywood Cinema news
கனவுகளின் கடவுளையே கொல்ல நினைக்கும் கும்பல்… The Sandman: Season 2 – Official Trailer – Netflix
நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட வெப் சீரிஸ்களை எடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு தமிழில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து netflix இயக்கிய தயாரித்த நிறைய சீரியஸ்கள் இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.
அப்படியாக ஏற்கனவே தமிழ் டப்பிங்கில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற சீரிஸ்தான் சாண்ட்மேன் சீரிஸ். இந்த சீரிஸை பொருத்தவரை கனவுகளின் கடவுளான கதாநாயகனை வைத்து கதைகளம் செல்கிறது.
ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு கடவுள் இருப்பது போல கனவுகளை உருவாக்குவதற்கும் கடவுள் என்று ஒரு கதாபாத்திரம் இருக்கும். அதுதான் சாண்ட்மேன் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்திற்கு சாவே இருக்காது.
அதை வைத்து கதை செல்லும். இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் முற்றிலும் வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. கனவுகளின் கடவுளை கொல்வதற்கான ஏற்பாடுகள் இதில் நடப்பதாக தெரிகிறது.
ஏனெனில் கனவுகளின் கடவுளை அழித்துவிட்டால் கனவுகளே இல்லாமல் போய்விடும் அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதாக இந்த சீரிஸின் கதை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதன் ட்ரைலர் தற்சமயம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இரண்டாவது சீசன் ஜூலை 3 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
