News
தமிழ் சூப்பர் ஸ்டார் படத்தில் இணையும் மலையாள சூப்பர் ஸ்டார்! – புது அப்டேட்?
அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். போன வருடம் ஜனவரி மாதம் அண்ணாத்த திரைப்படம் வெளியானது. அதற்கு பிறகு ஒரு வருடம் ஆன பிறகும் கூட இன்னும் அடுத்த படம் வரவில்லை.

எனவே இந்த படம் சிறப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஜெயில் வார்டனாக நடித்துள்ளார் ரஜினி. இந்த நிலையில் மலையாளத்தில் பெரும் நடிகரான மோகன்லால் இந்த படத்தில் முக்கிய கேமியோ கதாபாத்திரத்தில் வருவதாக கூறப்படுகிறது.
தமிழில் ரஜினிகாந்த் எப்படி பெரும் நட்சத்திரமோ, அதே போல மலையாளத்தில் மோகன்லால் பெரும் நட்சத்திரமாவார். இந்நிலையில் இருவரும் சேர்ந்து படம் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்குமா? என பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
