News
இதனாலதான் பீஸ்ட் தோத்துச்சா..? – போட்டு உடைத்த தயாரிப்பாளர்!
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறாத நிலையில் அதன் தோல்வி குறித்து பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்து நெல்சன் இயக்கி வெளியான படம் பீஸ்ட். நாளுக்கு நாள் படத்திற்கான எதிர்பார்ப்பு குறைந்து வரும் நிலையில் தியேட்டர்களில் பார்வையாளர்கள் வருகையும் குறைய தொடங்கியுள்ளது. படம் வெளியாகி இதுநாள் வரை ரூ.150 கோடியை பீஸ்ட் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பீஸ்ட் தோல்வி குறித்து பேசிய பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் “மற்ற மொழி படங்கள் இங்கே பெரும் ஹிட் அடிக்கின்றன. அஜித், விஜய் படங்கள் சினிமாவுக்கு செலவு செய்வது கிடையாது அவர்களுக்கே செலவு செய்து கொள்கின்றனர். பட்ஜெட்டில் 90 சதவீதத்தை அவர்கள் எடுத்துக் கொண்டால் 10 சதவீதத்தில் எப்படி நல்ல படம் எடுக்க முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பீஸ்ட் வசூலை தாண்டிய கேஜிஎஃப்2! – ஒருநாள் வசூல் இவ்வளவா?
