News
பீஸ்ட் வசூலை தாண்டிய கேஜிஎஃப்2! – ஒருநாள் வசூல் இவ்வளவா?
நேற்று கேஜிஎஃப்2 வெளியான நிலையில் ஒருநாள் கலெக்ஷனில் பீஸ்ட் படத்தை முந்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் விஜய்யின் பீஸ்ட் மற்றும் யஷ் நடித்த கேஜிஎப்2 வெளியாகியுள்ள நிலையில் இரு படங்களுக்கும் இடையே கலெக்ஷனில் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் வெளியான நிலையில் முதல் நாள் கலெக்ஷன் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.70 கோடி என தகவல்கள் வெளியானது. நேற்று வெளியான கேஜிஎப்2 உலகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
