Connect with us

15 லட்சம் வீவ்களை கடந்த கவுதம் கார்த்திக் படம் – ட்ரெய்லரே பயங்கரமா இருக்கே

News

15 லட்சம் வீவ்களை கடந்த கவுதம் கார்த்திக் படம் – ட்ரெய்லரே பயங்கரமா இருக்கே

Social Media Bar

நடிகர் நவரச நாயகன் கார்த்தியை பின்பற்றி சினிமாவிற்குள் வந்தவர் நடிகர் கவுதம் கார்த்திக். இவர் நடித்த முதல் படமே இயக்குனர் மணி ரத்னம் இயக்கியது ஆகும். மணிரத்னம் இயக்கிய கடல் படம் கவுதம் கார்த்திக்கு பெரிய வரவேற்பை ஏற்படுத்தி தரவில்லை என்றாலும் கூட அடுத்து வந்த பல படங்கள் அவருக்கு சிறப்பான படங்களாக அமைந்தன.

வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்கள் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று தந்தன. 

ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் தற்சமயம் இவர் நடித்து வரும் படம் ஆகஸ்ட் 16 1947 என்னும் படமாகும். சுதந்திரத்திற்கு முந்தைய பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு கிராமத்தில் உள்ள சாமானியனாக கதாநாயகன் இருக்கிறார். அவர் வெள்ளையர்களுக்கு எதிராக எடுக்கும் போராட்டங்களை கொண்டு கதை செல்கிறது.

இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15 1947 அன்று இரவில் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் மறுநாள் அது பலருக்கும் தெரியவில்லை. பல கிராமங்களில் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்றே நினைத்திருந்தனர். அந்த நிலையில் அப்படி சுதந்திரம் கிடைத்த பின்னரும் கூட சுதந்திரத்திற்காக போராடும் ஒரு கிராமத்தின் கதையாக இந்த படம் இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினமான கடந்த ஆகஸ்ட் 15 அன்று இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதுவரை இது 15 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது.

Bigg Boss Update

To Top