அவதாரை கண்டு அலறிய அக்குவாமேன்! – ரிலீஸ் தேதி மாற்றம்!


2009 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி உலக அளவில் மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம்தான் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார். 2009 லேயே 1000 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக 2,84,58,99,541 அமெரிக்க டாலருக்கு ஓடி வசூல் சாதனை படைத்தது. இப்போது வரை வசூல் சாதனையில் முதல் இடத்தில் உள்ள படமாக அவதார் உள்ளது.


அவதார் படம் வெளியாகி 13 வருடங்கள் ஆனாலும் இன்னும் அதன் இரண்டாம் பாகம் வரவே இல்லை. அவதார் முதல் பாகம் வந்தபோதே ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக ஆரவமுடன் காத்திருந்தனர். ஆனால் அதற்கு 13 வருடம் காத்திருக்க வேண்டும் என அவர்கள் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.


இந்நிலையில் அவதாரின் அனைத்து பாகங்களுக்கான வேலைகளையும் பார்த்து வருவதால் ஜேம்ஸ் கேமரூன் இவ்வளவு தாமதித்து வருவதாகவும் இந்த வருடம் முதல் தொடர்ச்சியாக அவதாரின் அனைத்து பாகங்களையும் எதிர்ப்பார்க்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

ரஜினி கெரியரையே க்ளோஸ் செய்த 10 படங்கள்

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் யுபிசாப்ட் என்னும் பிரபல கேமிங் நிறுவனம் அவதார் திரைப்படத்தை வீடியோ கேமாக்கி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட இருந்தது. ஆனால் அதில் அவதார் இரண்டாம் பாகத்தின் கதை வருவதால் டிசம்பர் மாதத்திற்கு வெளியீட்டை தள்ளி வைத்தது. இதன் மூலம் அவதார் இரண்டாம் பாகம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.


இந்நிலையில் தற்சமயம் அவதார் 2 திரைப்படம் டிசம்பர் 16, 2022 அன்று வெளியாகும் என நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள்ளன. 13 வருட காத்திருப்பை படம் நிறைவு செய்யும் என சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன. மேலும் அக்வா மேன் 2 திரைப்படமானது இதே தேதியில் வெளியாக இருந்தது.

ஆனால் அவதார் திரைப்படம் வெளியாக இருப்பதால் அக்வா மேன் திரைப்படத்தை 17.03.2023 ஆம் தேதி மாற்றி வெளியிடுகிறது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். இந்த படம் உலகம் முழுவதும் மொத்தம் 160 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் தண்ணீருக்கடியில் ஒரு உலகை நமக்கு அறிமுகம் செய்ய உள்ளனர். மேலும் இந்த படம் 3டி கண்ணாடி போடாமலேயே நமக்கு 3டி எஃபெக்டை தரும் என கூறப்பட்டுள்ளது. எனவே அவதார் 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

Refresh