ஏ.. BoxOffice ரெக்கார்டே.. ரெடியா இருந்துக்கோ..! – வெளியானது அவதார் 2 டீசர் போஸ்டர்!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் தேதி வெளியான படம் அவதார்.

பண்டோரா என்ற கிரகத்தில் நடப்பதாக உருவாக்கப்பட்ட இந்த படம் வசூலிலும், விமர்சன ரீதியாகவும் பெரும் ஹிட் அடித்தது. மேலும் உலக அளவில் 2.81 பில்லியன் டாலர் வசூல் செய்து உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு டிசம்பரில் அவதாரின் அடுத்த பாகமான அவதார்: த வே ஆஃப் வாட்டர் (Avatar The way of Water) வெளியாக உள்ளது. இதற்கான க்ளிம்ப்ஸ் வீடியோ டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்துடன் வெளியான நிலையில் பெரும் வைரலானது.

தற்போது இந்த படத்தின் அதிகாரப்பூர்வ Avatar 2 Teaser ஐ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வரும் நிலையில் அவதார் முதல் பாகத்தின் கலெக்‌ஷனை இந்த இரண்டாம் பாகம்தான் முறியடிக்க போகிறது என்று பேசிக் கொள்ளப்படுகிறது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh