Connect with us

ரெண்டே நாளில் 2000 கோடியா? – உலக சினிமாவையே அதிர வைத்த அவதார்!

Hollywood Cinema news

ரெண்டே நாளில் 2000 கோடியா? – உலக சினிமாவையே அதிர வைத்த அவதார்!

Social Media Bar

உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களை பெரும் ஆவலுக்கு உட்படுத்தி வெளிவந்த திரைப்படம்தான் அவதார் த வே ஆஃப் வாட்டர்.

அவதாரின் முதல் பாகம் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து அப்போதே உலக அளவில் பெரும் வசூல் சாதனை படைத்து முதல் இடத்தில் இருந்தது. இப்போது வரை அந்த வசூல் சாதனையை எந்த படமும் முறியடிக்கவில்லை.

அதன் சாதனையை அவதாரின் இரண்டாம் பாகம் முறியடிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 52,000 திரையரங்குகளில் வெளியானது அவதார் த வே ஆஃப் வாட்டர்.

உலக புகழ்ப்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இந்த படத்தில் புது 3டி தொழில்நுட்பம், 48 எஃப்.பி.எஸ் என பல புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தியிருந்தார். பார்ப்பவரே இது கிராபிக்ஸ்தானா என யோசிக்கும் வகையில் படம் அமைந்திருந்தது.

இந்த படத்தின் வெற்றியை பொறுத்தே அவதாரின் அடுத்த பாகங்கள் வரும் என ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார். இந்த நிலையில் இரண்டே நாட்களில் 2100 கோடி வசூல் சாதனை செய்துள்ளது அவதார். இன்னும் வரும் நாட்களில் பல கோடி ரூபாய்க்கு படம் ஓடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Bigg Boss Update

To Top