ரவுடிசம் பண்றிங்க நீங்க? – அசிமிற்கு எதிராக குவியும் கூட்டம்!

இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே பல்வேறு பிரச்சனைகளை செய்து வரும் இரண்டு போட்டியாளர்கள் என பார்த்தால் ஒன்று அசிம் மற்றொன்று தனலெட்சுமி.

இந்த வாரம் துவங்கியது முதல் தனலெட்சுமி கூட அவ்வளவாக சண்டை எதுவும் போடவில்லை. ஆனால் அசிம் எப்போதும் அனைவரிடமும் பிரச்சனை செய்துக்கொண்டே இருக்கிறார். அவரிடம் யார் கேள்வி கேட்டாலும் மிகவும் கோபமாக அவர்களுக்கு பதிலளிக்கிறார்.

ஆனாலும் கூட இப்போது வரை அசிம் எலிமினேட் ஆகவில்லை. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் அமுதவாணனுக்கும் அசிமிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது அசிம் அமுதவானனை திட்டினார். இதனால் கடுப்பான விக்ரமன் இங்கே என்ன ரவுடிசம் செய்கிறீர்களா? என சத்தம் போட துவங்கினார்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள பெரும்பாலனவர்கள் அசிமிற்கு எதிராகவே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அசிம் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீடிப்பாரா என தெரியவில்லை.

Refresh