லூசு மாதிரி பேசாதீங்க -அசீமை காண்டாக்கிய ஜனனி

விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடி கொண்டிருக்கும் ஷோ பிக்பாஸ். எல்லா வாரமும் எதாவது சண்டையாக செல்வதுதான் பிக் பாஸை சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் விஷயமாகும்.

அந்த நிகழ்வை நடந்தும் விஜய் டிவியும் உளவியலாக எப்படியான போட்டிகளை வைத்தால் அவர்களை சண்டையிட செய்ய முடியும் என்பதை தெரிந்துக்கொண்டு அந்த விஷயங்களை சரியாக செய்து வருகிறது.

அந்த வகையில் இன்று போட்டி ஒன்று நடந்து கொண்டிருக்கையில் ஜனனிக்கும், அசிமிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. எப்போதும் இந்த மாதிரியான சண்டைகள் நடக்கும்போது முதலில் சண்டையை ஆரம்பித்து வைப்பவராக அசிம்தான் இருப்பார்.

ஆனால் இந்த முறை ஜனனி சண்டையை துவங்கி வைத்தார். அசிம் ஏதோ ஒன்று பேச உடனே ஜனனி “லூசு மாதிரி பேசாதீங்க” என கூற, இருவருக்கும் பெரும் பிரச்சனை ஆனது.

ஏற்கனவே ஜனனி மீது எதிர்மறையான கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் இந்த பிரச்சனை ஜனனிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் ப்ரோமோவை காண இங்கு க்ளிக் செய்யவும்

Refresh