Bigg Boss Tamil
உங்கள மாதிரி பொய் பேச எனக்கு தெரியாது – மறுபடியும் சண்டையை கிளப்பிய அசிம்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் துவங்கியது முதலே ட்ரெண்டிங்கில் இருக்கும் பெயர் அசிம். ஒவ்வொரு வாரமும் அசிம் யார் கூடவாவது சண்டை போடுவதே பிக் பாஸில் முக்கிய நிகழ்வாக உள்ளது.

இந்த வாரம் பிக் பாஸில் இந்த டிவி, அந்த டிவி என்ற பெயரில் ஒரு போட்டி நடந்து வந்தது. அந்த போட்டியில் தலைப்பு செய்திகள் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரண்டு டீமில் ஒவ்வொரு டீமுக்கும் ஒரு ஆள் தலைப்பு செய்திகள் வாசிக்க வேண்டும்.
ஒரு பக்கம் நிவாஷினியும் இன்னொரு பக்கம் விக்ரமனும் செய்தி வாசித்தனர். நிவாஷினிக்கு தமிழே படிக்க வரவில்லை. ஆனால் விக்ரமன் சிறப்பாக செய்தி வாசித்திருந்தார். இருந்தாலும் கூட மகேஸ்வரி விக்ரமனுக்கு குறைந்த மதிப்பெண்களே கொடுத்தார். இதனால் அசிம் விக்ரமனுக்கு சப்போர்ட்டாக பேசினார். எனவே அசிமிற்கும் மகேஸ்வரிக்கும் சண்டை ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று அசிம் மற்றும் மகேஸ்வரி இருவருக்கும் அதிக சண்டை ஆனது. இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி கொண்டனர்.
வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.
