கதாநாயகியுடன் சரக்கடித்த பாலகிருஷ்ணா! – ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்!

தெலுங்கு கதாநாயகர்களில் முன்னணி கதாநாயகர்களில் முக்கியமானவர் பாலகிருஷ்ணா. இவர் நடிக்கும் திரைப்படங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு பார்ப்பதற்கு கடினமாக இருந்தாலும், தெலுங்கு சினிமாவில் இவரது திரைப்படத்தை பார்க்கவும் ஒரு ரசிக பட்டாளம் உள்ளது.

அது மட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுக்கும் கதாநாயகர்களில் ஒருவராக பாலகிருஷ்ணா இருக்கிறார். தற்சமயம் பாலகிருஷ்ணா நடித்து வீர சிம்ஹா ரெட்டி என்கிற திரைப்படம் தெலுங்கில் வெளியானது.

பொங்கலை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஹனி ரோஸ், துனியா விஜய், வரலெட்சுமி சரத்குமாரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 104 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது வீர சிம்ஹா ரெட்டி.

இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வெற்றி விழாவில் நடிகை ஹனி ரோஸோடு சேர்ந்து மது அருந்தியுள்ளார் பாலகிருஷ்ணா.

சமூக வலைத்தளங்களில் தற்சமயம் இந்த புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

Refresh