அந்த பையன் என்ன பிரமாண்டத்தையா நம்புனான்.. இயக்குனர் ஷங்கரை மறைமுகமாக தாக்கிய பாக்கியராஜ்.!
தமிழ் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பெரும்பாலும் பாக்யராஜின் திரைப்படங்கள் அப்போதெல்லாம் பெரும் வெற்றியைதான் ஏற்படுத்தி கொடுத்தன. முக்கியமாக குடும்ப ஆடியன்ஸின் மீது கவனம் செலுத்தியே எப்போதும் படங்களை எடுத்து வந்தார் பாக்யராஜ்.
இந்த நிலையில் காலம் செல்ல செல்ல அவருடைய திரைப்படங்களுக்கு இருந்த வரவேற்பு என்பது குறைய துவங்கியது. தற்சமயம் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார் பாக்கியராஜ். சமீபத்தில் சினிமாவில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அவர் பேசியிருந்தார்.
அதில் கூறிய பாக்கியராஜ். சினிமா நிறையவே மாறிவிட்டது. பிரமாண்டமாக படம் எடுத்தால்தான் ஓடும் என நினைக்கிறார்கள். நானெல்லாம் எனது முதல் படத்திற்கு அட்வான்ஸ் தொகையாக 500 ரூபாய்தான் வாங்கினேன். அந்த தயாரிப்பாளருக்கு ஹிட் கொடுத்த பிறகு அவர் தொடர்ந்து எனக்கு பல பட வாய்ப்புகளை தந்தார்.
சமீபத்தில் கூட பிரதீப்னு ஒரு பையன் டிராகன்னு ஒரு படம் நடிச்சிருக்கான். அந்த படத்தை வேறு இயக்குனர் இயக்கியுள்ளார். கோடிகளில் வசூலிச்சுகிட்டு இருக்கு அந்த படம். அந்த படத்தை பிரமாண்டத்தை நம்பியா எடுத்தாங்க. கதையை நம்பி எடுத்துருக்காங்க.
அதுனால எப்போதும் பிரமாண்டத்தை நம்பி படம் பண்ண கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார் பாக்கியராஜ். இது கிட்டத்தட்ட இயக்குனர் ஷங்கரை தாக்கி பேசியது போல உள்ளது என்கின்றனர் நெட்டிசன்கள்.