இன்னமும் கூட பாரதிராஜாவுக்கு இருக்கும் ஆசை.. என்ன ஒரு மனுசன் பாருங்க..!

சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலகட்டங்கள் முதலே சர்ச்சையான கருத்துக்களை தனது திரைப்படத்தில் பேசியும்கூட வெற்றிவாகை சூடியவர் இயக்குனர் பாரதிராஜா.

அவருடைய திரைப்படம் 16 வயதினிலே, முதல் மரியாதை, சிகப்பு ரோஜாக்கள் மாதிரியான ஒவ்வொரு திரைப்படத்திலும் அவர் பேசிய விஷயங்கள் என்பது தமிழ் சினிமாவில் கொஞ்சம் மாறுபட்டது என்று கூறலாம்.

வயதான காலத்தில் கூட இப்பொழுதும் திரைப்படங்களில் பாரதிராஜா தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு உடல் நிலையும் கொஞ்சம் சரியில்லாத காரணத்தினால் இப்பொழுது திரைப்படங்களிலும் அவ்வளவாக நடிப்பது கிடையாது

bharathiraja
bharathiraja
Social Media Bar

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் காலமானார். அது பாரதிராஜாவை இன்னும் அதிக துயரத்திற்கு உள்ளாக்கியது. இது குறித்து பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் கூறும் பொழுது பையனை இழந்த சோகத்தில் இருந்து இன்னும் அவர் வெளிவரவில்லை.

ஏற்கனவே அவருக்கு உடல்நிலை மோசமாக தான் இருந்தது அதோடு இப்பொழுது இந்த சோகமும் சேர்ந்ததும் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இப்படி ஒரு நிலைமையிலும் பாரதிராஜாவுக்கு இன்னமும் ஒரு ஆசை இருக்கு அது என்னன்னா இன்னும் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் இன்னும் ஒரு படம் இயக்கி அதுல உன்ன நடிக்க வைக்கிறேன் இதுவரைக்கும் உன்னை எந்த படத்திலும் நடிக்க வைக்கவில்லை என்று என்னிடம் கூறினார் என இது குறித்து கூறுகிறார் ஜெயராஜ்.