Bigg Boss Tamil
இது மட்டும் உங்களுக்கு நல்லா தெரியுது? – ஜிபி முத்துவை கலாய்த்த கமல்
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே ஜிபி முத்து ஒரு கலகலப்பான போட்டியாளராக இருந்து வருகிறார். வந்த முதல் நாளே கமல் அவரை கலாய்ததார்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்துவிற்கும், தனலெட்சுமிக்கும் சண்டை வந்துவிட்டது. இதனால் இருவருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் பிக் பாஸ் வீட்டில் இன்னமும் பலருக்கும் பிடித்த நபராக ஜிபி முத்து இருக்கிறார்.

ஒரு வாரத்திற்கு பிறகு சனி ஞாயிறுகளில் பிக் பாஸ் போட்டியாளர்கள் செய்த விஷயங்கள் குறித்து பேசுவது வழக்கம். அந்த வகையில் இன்று கமல்ஹாசன் பிக் பாஸ் குறித்து போட்டியாளர்களிடம் பேசுவார்.
முதல் நாள் ஜிபி முத்து உள்ளே வந்தபோது அவரிடம் கமல் ஆதாம் பற்றி ஒரு விஷயம் கூறுவார். அப்போது ஜிபி முத்து ”ஆதாமா அது யாரு?” என கேட்டுவிடுவார். அதற்காக இந்த முறை அவரிடம் பாதாமை கொடுத்து இது என்ன? என கேட்டார் கமல். அதற்கு ஜிபி முத்து பாதாம் என கூற, “உங்களுக்கு பாதாமை தெரியுது? ஆனால் ஆதாமை தெரியவில்லையா? இதை கேட்டு ஆதாம் எவ்வளவு மன வருத்தம் அடைந்தார் தெரியுமா? என கூறினார்.
உடனே ஜிபி முத்து ஆதாம் எங்க இருக்கார் என கேட்டார். இப்படியாக யதார்த்தமாக பேசுவதே ஜிபி முத்துவின் இயல்பாக இருக்கிறது.
