Connect with us

ஒரே போன்காலில் மொத்த சம்பாத்தியத்தையும் இழந்த பிக்பாஸ் சௌந்தர்யா?. மொத்த பணத்தையும் கொடுக்க என்ன காரணம்.!

soundarya

Bigg Boss Tamil

ஒரே போன்காலில் மொத்த சம்பாத்தியத்தையும் இழந்த பிக்பாஸ் சௌந்தர்யா?. மொத்த பணத்தையும் கொடுக்க என்ன காரணம்.!

Actress Soundarya Nanjundan became popular among people by participating in Bigg Boss season 8. she has said that he has lost money in an online scam. It is becoming more and more viral

மொபைல் போன் வழியாக மோசடிகள் செய்து மக்களிடம் பணத்தை பறிப்பது என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எவ்வளவு தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் எளிதாக கிடைக்கிறதோ அதே அளவிற்க்கு அதற்கான ஆபத்துகளும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் பலரும் தினசரி இந்த மாதிரியான மோசடிகள் மூலமாக பணத்தை இழந்து வருவது நடந்து வருகிறது. ஆனால் தற்சமயம் பிக்பாஸில் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வரும் நடிகை சௌந்தர்யாவிற்கும் அந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏமாந்த சௌந்தர்யா:

சௌந்தர்யாவே இதை பிக் பாஸில் வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது பிக் பாஸ் சௌந்தர்யாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு நபர் போன் செய்து தவறான போதை பொருட்கள் விமானத்தில் கடத்தப்பட்டதாகவும் அதில் சௌந்தர்யாவின் பெயர் இடம் பெற்று இருப்பதாகவும் கூறி அவருக்கு போன் செய்து மிரட்டி இருக்கின்றனர்.

இதை உண்மை என்று நினைத்து பயந்து இருக்கிறார் சௌந்தர்யா. இந்த நிலையில் அவரது வங்கி கணக்கில் இருக்கும் பணம் இந்த போதை பொருள் மூலமாக சம்பாதித்ததா என்று அவர்கள் கேள்வியை எழுப்பி உள்ளனர்.

மேலும் அவர் வங்கியில் வைத்திருக்கும் 17 லட்சம் ரூபாயையும் இவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர். அதனை தொடர்ந்து சௌந்தர்யாவும் அந்த பணத்தை கொடுத்திருக்கிறார். அதன் பிறகு தான் மோசடியில் அவர் சிக்கி உள்ளார் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது.

பிறகு காவல் நிலையத்தை அணுகி இது குறித்து புகார் அளித்திருக்கிறார் ஆனால் அந்த பணம் அவருக்கு திரும்ப கிடைக்கவே இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது மிகப்பெரும் படித்த பிரபலங்களே இப்படி மோசடிகளில் ஏமாறுகிறார்களே என்று இது குறித்து பேசி வருகின்றனர் நெட்டிசன்கள்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

shruthika
biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
To Top