Bigg Boss Tamil
ரெண்டு பேரும் சேர்ந்து குட்டி போட போறோம்!.. பூர்ணிமா மூட் வேற மாறி ஆயிட்டு இருக்கு!.. கடுப்பான விஷ்ணு!..
Poornima and Vishnu : பிக்பாஸில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புல்லி கேங் என்கிற ஒரு குழு உருவாகி பிக்பாஸ் வீட்டையே அட்ராசிட்டி செய்தது வந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இந்த நிலையில் அதன் விளைவாக இவர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் தவறான பிம்பத்தில் தெரிய துவங்கினர்.
வார இறுதியில் கமல்ஹாசன் இவர்களை எல்லாம் வைத்து செய்தபோது மக்கள் இதனை ஆரவாரம் செய்தனர். எனவே மக்கள் மத்தியில் நாம் நெகட்டிவாக தெரிகிறோம் என்பதை அறிந்த பூர்ணிமா அதிலிருந்து மற்றவர்களை கிண்டல் செய்வதை நிறுத்தியுள்ளார்.
ஆனால் விஷ்ணுவிற்கும் பூர்ணிமாவிற்கும் இடையே பிரச்சனைகள் இருந்தது. இந்நிலையில் இருவரும் அதனை பேசி சரி செய்தனர். இருந்தாலும் விஷ்ணு என்ன சொன்னாலும் அதை அப்படியே மாயாவிடம் கூறி வந்தார் பூர்ணிமா. இந்த போக்கு பிடிக்காத விஷ்ணு இனி என் கூட பேசாத என நேரடியாகவே கூறினார்.
இருந்தாலும் தற்சமயம் பூர்ணிமா விஷ்ணுவுடன் சுற்றி கொண்டிருக்கிறார். ஒருவேளை பூர்ணிமா ஒரு காதல் கதையை துவங்கி வைக்க போகிறாரோ என்கிற பேச்சும் இருந்து வருகிறது. பிக்பாஸில் ட்ரெண்ட் ஆவதற்கு அது ஒரு எளிமையான வழி ஆகும்.
இந்நிலையில் இன்று விஷ்ணுவும் பூர்ணிமாவும் ஆடி கொண்டிருக்கும்போது எதற்காக இருவரும் இப்படி சுற்றி கொண்டே இருக்கிறீர்கள் என கேட்டப்போது நாங்கள் குட்டி போட போறோம் பூனைக்குட்டி மாதிரி என கூறியுள்ளார் பூர்ணிமா. இதில் ஏதாவது டபுள் மீனிங் இருக்குமா என்பதே ரசிகர்களின் சந்தேகமாக இருக்கிறது!.