Connect with us

ஜக்கி வாசுதேவோட சீடர்ல அவரு… பெரியாரை கலாய்த்ததால் சந்தானத்தை பிரித்த பத்திரிக்கையாளர்!.

santhanam jaggi

News

ஜக்கி வாசுதேவோட சீடர்ல அவரு… பெரியாரை கலாய்த்ததால் சந்தானத்தை பிரித்த பத்திரிக்கையாளர்!.

Social Media Bar

Actor Santhanam : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து தற்சமயம் கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். சந்தானம் கதாநாயகனாக ஆன பிறகு கூட தொடர்ந்து காமெடி கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவரது திரைப்படங்களுக்கு ஓரளவு வரவேற்பு உண்டு என்று கூறலாம்.

அவரது ஏ1, தில்லுக்குதுட்டு மாதிரியான சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன என்றாலும் சந்தானம் நடிக்கும் அதிக திரைப்படங்கள் வெகுவாக வரவேற்பை பெறுவதில்லை என்றே கூற வேண்டும்.

இந்த நிலையில் தற்சமயம் சந்தானம் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம்தான் வடக்குப்பட்டி ராமசாமி. வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் டிரைலர் நான்கு நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த திரைப்படத்தின் டிரைலரை பொருத்தவரை மூடநம்பிக்கைகளை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் கிராமத்தில் இருக்கும் ஒரு ஆளாக கதாநாயகன் உள்ளார் என்பது தெரிகிறது.

ராமசாமி என்கிற பெயரைக் கொண்ட பெரியார் மூடநம்பிக்கைக்கு எதிராக போராடினார். ஆனால் இந்த ராமசாமி மூடநம்பிக்கைகளுக்கு ஆதரவாக இருந்து அதன் மூலமாக பணம் சம்பாதிக்கிறார் என்பதாக கதை அமைந்துள்ளது. இதனை விளக்கும் விதமாக சந்தானம் அந்த ராமசாமியில்லை என்று ஒரு ஹாஸ்ட்டாகை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

ஆனால் இது பெரியாரை அவமதிப்பாக உள்ளது என்று கருதிய மக்கள் தொடர்ந்து சந்தானத்தை விமர்சிக்க துவங்கினர். இதனை அடுத்து சந்தானம் அந்த பதிவை நீக்கிவிட்டார். இது குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி கூறும் பொழுது சந்தனத்தை பொருத்தவரை அவர் ஜக்கி வாசுதேவை பின்பற்றக் கூடியவர்.

அவர் பெரியாரை விமர்சித்து பேசாமல் வேறு எப்படி பேசுவார் மேலும் இப்படி ஒரு பதிவை போட்டு மக்கள் மத்தியில் அதற்கு எதிர்மறையான கருத்து வரும் பொழுது சந்தானம் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்கிறார் பிஸ்மி.

To Top