என்ன வெண்ணைக்கு அப்படி கேள்வி கேட்குற.. யூ ட்யூப்பர் மதன் கௌரி தாக்கப்பட்டாரா?..

தமிழ் சினிமாவில் நடிகர்கள் எந்த அளவிற்கு பிரபலமானவர்களாக இருக்கிறார்களோ அதே அளவிற்கு பிரபலமானவர்களாக இப்போது சமூக வலைத்தளங்களை சேர்ந்தவர்களும் இருந்து வருகின்றனர். அந்த வகையில் வெகு வருடங்களாகவே பிரபலமானவராக இருந்து வருகிறார் யூ ட்யூப்பர் மதன் கௌரி.

மதன் கௌரி பல வருடங்களாகவே நடப்பு செய்திகள் மற்றும் பொதுவான தகவல்களை வழங்கி வருகிறார். இந்தியாவில் யூ ட்யூப் வந்த காலத்தில் இருந்தே இவர் வீடியோ செய்து வெளியிட்டு வருவதால் இவருக்கு  நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அதே சமயம் மதன் கௌரி குறித்து கலவையான விமர்சனங்களும் தொடர்ந்து இருந்து வருகின்றன. அந்த வகையில் அவர் கூறிய பல செய்திகள் தவறாக இருந்துள்ளன. அதற்காக மதன் கௌரி அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

Social Media Bar

இந்த நிலையில் மற்றொரு யூ ட்யூபரான சர்வ்ஸ் சகா சமீபத்தில் ஒரு பேட்டியில் மறைமுகமாக மதன் கௌரியை தாக்கி பேசியிருந்தார். அவர் பேசும்போது இப்போதெல்லாம் சில அரசியல் தலைவர்கள் ட்ரெண்டிங்கில் இருக்கும் யூ ட்யூப்பர்கள் சேனலில் பேட்டி கொடுக்கின்றனர்.

அந்தப் பேட்டிகளில் அரசியல் சார்ந்த கேள்விகளை கேட்டால் சரியாக இருக்கும் ஆனால் அவர்களின் சொந்த வாழ்க்கையில் உள்ள கேள்விகளை அந்த யூ ட்யூப்பர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர் உதாரணத்திற்கு நீங்கள் என்ன கல்லூரியில் படித்தீர்கள்.

உங்களுடைய காதல் வாழ்க்கை எப்படி இருந்தது இந்த மாதிரியான கேள்விகளை கேட்கின்றனர் ஒரு அரசியல் தலைவரை பேட்டி எடுக்கும் பொழுது என்ன மாதிரியான கேள்வி கேட்க வேண்டும் என்பது கூட இவர்களுக்கு தெரியவில்லை என்று கடுமையாக பேசியிருந்தார் சர்வ்ஸ் சகா.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.