எங்க அப்பாவுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி கமல் சார் –  பிரபல நடிகரின் மகன் வாழ்த்து

பல சுவாரஸ்யமான விஷயங்களை கொண்டு வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படம் கைதி திரைப்படத்தோடு இணைக்கப்பட்டு அதன் அடுத்த பாகங்கள் எடுக்கப்பட இருக்கின்றன. 

லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் பயங்கரமான ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது வந்துள்ள விக்ரம் திரைப்படம் புதிய பாணியில் இருப்பதால் ரசிகர்களை மகிழ்விக்க லோகேஷ் கனகராஜ் ஒரு விஷயத்தை செய்திருந்தார்.

இதற்காக அவர் 1986 இல் வெளியான விக்ரம் திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரங்களை இந்த படத்திலும் பயன்படுத்தியிருந்தார். அந்த வகையில் படத்தின் ஆரம்ப கட்டத்தில் சாதரண கதாபாத்திரமாக வரும் சந்தான பாரதி, பிறகு முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறுகிறார்.

எனவே தனது தந்தைக்கு அப்படி ஒரு முக்கியமான கதாபாத்திரம் அளித்ததற்கு நன்றி என கூறி சந்தானபாரதியின் மகன் சஞ்சை பாரதி லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் இருவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Refresh