TV Shows
உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள் – மீம் க்ரியேட்டர்களை கேள்வி கேட்ட வெங்கடேஷ் பட்
தற்சமயம் இணையத்தில் மிகவும் சர்ச்சையாகி வரக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது.
இந்த நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள நிகழ்ச்சியாகும். கடந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் பேசும்போது ஒரு சர்ச்சையான விஷயத்தை பேசி இருந்தார்.

அதாவது ஒரு பெண்ணுக்கு வெகு நாட்களாக மன அழுத்தம் காரணமாக கர்ப்பம் தரிக்காமல் இருந்ததாகவும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு பிறகு அதனால் கர்ப்பம் ஆனதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விஷயம் இணையத்தில் மிகவும் சர்ச்சையானது. பலரும் இதற்காக செஃப் வெங்கடேஷ் பட் குறித்து பல்வேறு விவாதங்களை எழுப்பி வந்தனர். இந்நிலையில் இதுக்குறித்து பேசிய வெங்கடேஷ் பட் “மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். குழந்தை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் அது எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்பது தெரியும். ஆனால் குழந்தையே இல்லாதவர்கள் அதற்காக மிகவும் போராடி வருகின்றனர். எனவே நீங்கள் என்னை விமர்சிப்பதாக நினைத்து உங்கள் தரத்தை தாழ்த்தி கொள்ளாதீர்கள்” என கூறியுள்ளார்.

ஒருவர் கர்ப்பமான விஷயத்தை செஃப் வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்காக பயன்படுத்துவது மட்டும் சரியான செயலா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
