Tamil Cinema News
பொண்ணு பார்க்க போன இடத்தில் நடந்த அவமானம்..! வெளிப்படையாக கூறிய வெங்கடேஷ் பட்.!
விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் வெங்கடேஷ் பட். வெங்கடேஷ் பட்டை பொருத்தவரை அவர் பல வருடங்களாகவே விஜய் டிவியில் நிறைய சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
ஆனால் அதையெல்லாம் தாண்டி வெங்கடேஷ் பட்டை அதிக பிரபலமாகியது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு வெங்கடேஷ் பட் மிகவும் ஜாலியான ஒரு நடுவராக இருந்து வந்தார்.
ஏனெனில் அதற்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் எல்லாம் வெங்கடேஷ் மிக கோபமான ஆளாக இருப்பார். ஆனால் ஜாலியாக இருந்ததை பார்த்து அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாக துவங்கியது.
உண்மையை சொன்ன வெங்கடேஷ் பட்:
இந்த நிலையில் அதிக பிரபலம் அடைந்த அவர் தற்சமயம் சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சமையல் நிகழ்ச்சிகளும் பங்கேற்று வந்தார். சமீபத்தில் அவர் பேட்டியில் பேசும் பொழுது தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசி இருந்தார்.
அதில் அவருக்கு கூறும் பொழுது என்னை பெண் பார்க்க எனது மனைவி வருவதற்கு முன்பே அவருக்கு என்னுடைய போட்டோ அனுப்பப்பட்டது. நான் குளிர்பிரதேசத்தில் வேலைக்கு சென்று இருந்த பொழுது அங்கே ஒரு பனி கோர்ட் எல்லாம் போட்டு ஒரு போட்டோ எடுத்திருந்தேன்.
அதில் பார்ப்பதற்கு இன்னுமே குண்டாக தெரிவேன் அந்த போட்டோவை அனுப்பி வைத்தனர். அதை பார்த்து எனது மனைவி உருளைக்கிழங்கு மாதிரி இருக்கிறார் இவர் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் வெங்கடேஷ் பட்.