ரியாலிட்டி நிகழ்ச்சிகளால் வந்த ஆபத்து.. வெளிப்படையாக பேசிய சின்மயி..!
சமீபகாலமாக பாடகி சின்மயி அதிக பிரபலமாகி வருகிறார். சமீபத்தில் தக்லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த இசை வெளியீட்டு விழாவில் முத்தமலை என்கிற ஒரு பாடலை சின்மயி பாடி இருந்தார்.
ஆனால் அந்தப் பாடலை நிஜத்தில் பாடியது பாடகி தீ. ஆனால் அவர் அன்று பிசியாக இருந்த காரணத்தால் சின்மயி அந்த பாடலை பாடினார். சின்மயி பாடிய பாடல் அதிக பிரபலம் அடைந்தது. தொடர்ந்து சின்மயிக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில் இது குறித்து பேசிய சின்மயி கூறும் பொழுது ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பார்த்து பார்த்து மக்கள் முதலிடம் இரண்டாம் இடம் என்கிற மனநிலைக்கு சென்று விட்டனர். இதற்கு முன்பு கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் நான் பாடிய பொழுது அதில் ஆண் பாடகர்களாக பெரிய பெரிய பாடகர்கள் என்னுடன் பாடினர்.
ஆனால் அப்பொழுதெல்லாம் இந்த மாதிரியான பிரச்சனைகள் வரவில்லை இப்பொழுது இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்து மக்கள் மனம் மாறிவிட்டனர் என்று கூறியுள்ளார் சின்மயி..