ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் பிரபலமாக இருக்கும் வெப் சீரிஸ்களில் மிக முக்கியமான வெப் சீரிஸாக Criminal Justice இருந்து வருகிறது. ஹிந்தியில் பிரபல நடிகரான பங்கஜ் திருபாட்டிதான் இந்த சீரிஸில் கதாநாயகனான மாதவ் மிஸ்ரா என்கிற வழக்கறிஞராக நடித்துள்ளார்.
இந்த சீரிஸில் ஒவ்வொரு சீசனிலுமே சூழ்நிலையின் காரணமாக குற்றவாளி ஆக்கப்பட்ட நபர் ஒருவர் இருப்பார். அனைத்து சாட்சிகளுமே அவர்தான் குற்றவாளி என்பதாக காட்டுவதாக இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மாதவ் மிஸ்ரா எப்படி அந்த வழக்கில் ஜெயித்து குற்றவாளியை காப்பாற்றுகிறார் என்பதாக கதை இருக்கும்.
நான்காவது சீசனான Criminal Justice: A family matter உம் அதே மாதிரியான கதை அமைப்பைதான் கொண்டுள்ளது. கதைப்படி ராஜ் நாக்பால் என்னும் மருத்துவர் அவரது மகளின் பிறந்தநாளுக்கு பிறகு அவரது கள்ள காதலியான ரோஷினி சலுஜாவை யாரோ கொலை செய்கின்றனர்.
அந்த பழி இவர் மீது விழுகிறது. இவர் கைது செய்யப்படுகிறார். இந்த நிலையில்தான் இந்த வழக்கு மாதவ் மிஸ்ரா கைக்கு வருகிறது. அவர் எப்படி இந்த வழக்கை முடிக்கிறார் என சுறுசுறுப்பாக செல்லும் கதைதான் Criminal Justice சீரிஸ்.