Movie Reviews
OTT Review: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வந்த Uppu Kappurambu படம் தேறுனுச்சா? இல்லையா?
சமீப காலங்களாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது கிடைத்து வருகிறது. கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகை ஆவார். அதிக பிரபலமான பிறகு தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களங்களை இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அவரது நடிப்பில் வெளியான ரகுதாதா திரைப்படம் கூட ஓரளவு வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் ரிவால்வார் ரீட்டா. இதற்கு நடுவே சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம்தான் உப்பு கப்புரம்பு.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. நேரடியாக ஓ.டி.டியில் வெளியாகியுள்ளது. இது முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை அனி ஐ.வி சசி இயக்கியுள்ளார். சுகாஷ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் கதைப்படி கீர்த்தி சுரேஷின் ஊர் கல்லறைக்கு புகழ்பெற்றதாக இருக்கிறது. அந்த ஊர் கல்லறையில் பிணங்களை புதைப்பதை ஒரு கௌரவமான விஷயமாக பார்க்கின்றனர்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது தந்தை இறந்ததை அடுத்து அந்த ஊரின் தலைவர் ஆகிறார். அந்த சமயம் பார்த்துதான் ஒரு பிரச்சனை வருகிறது. அது என்னவென்றால் கல்லறை முழுமையடைந்துவிட்டது. இன்னும் 4 பேரை மட்டும்தான் கல்லறையில் புதைக்க முடியும். அதற்கு மேல் யாரையும் புதைக்க முடியாது.
இந்த நிலையில் இதை சரி செய்ய கீர்த்தி சுரேஷ் என்னவெல்லாம் செய்ய போகிறார் என்பதாக கதை செல்கிறது.
இந்த திரைப்படத்தை பொறுத்தவரை இதில் காமெடி காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் என இருந்தது. ஆனால் படம் 1990 இல் நடப்பது போன்ற கதை அமைப்பை கொண்டது. அதை சிறப்பாகவே செய்திருந்தனர்.
