News
பதானுக்கு குவியும் எதிர்ப்புகள்! – கட் அவுட்டை அடித்து நொறுக்கிய இந்து கட்சி
பெரிய அளவில் இந்தியா முழுவதும் வெளியாக இருக்கும் திரைப்படம் பதான். இந்த படத்தில் கதாநாயகனாக ஷாருக்கான் நடிக்கிறார். கதாநாயகியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.
இந்த படத்தை இந்திய அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே ஹிந்தி, தெலுங்கு,தமிழ் என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது பதான்.

இதற்கு முன்பு பதான் படத்தில் இருந்து ஒரு ப்ரோமோ பாடல் மட்டும் வெளியாகி இருந்தது. அழையா மழை என்ற அந்த பாடல் ஏற்கனவே சர்ச்சையை உருவாக்கி இருந்தது. அந்த பாடலில் தீபிகா படுகோன் பிகினி உடை அணிந்திருப்பார்.
அந்த உடை காவி நிறத்தில் இருந்தது. எனவே இந்துக்களின் புனித நிறமான காவி நிறத்தை கலங்கப்படுத்திவிட்டனர் என குற்றச்சாட்டு எழுந்தது.
வருகிற 25 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அகமாதப்பாத்தில் ஒரு வணிக வளாகத்தில் இந்த படத்திற்கு கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. பஜ்ரங்தள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் அந்த கட் அவுட்டை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
