Cinema History
நீ என்னடா பண்ற இங்க? வீடியோ காலில் வந்த ஆர்யா! – ப்ரியாமணியை ஷாக் ஆக்கிய சம்பவம்!
தமிழ் சினிமாவில் ’பருந்திவீரன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியாமணி. மலைக்கோட்டை, ராவணன் என பல படங்கள் நடித்த ப்ரியாமணி சில காலம் சினிமாவில் காணாமலே போய்விட்டார். பின்னர் இந்தியில் வெளியான ஃபேமிலிமேன் வெப் சிரிஸ் மூலம் மீண்டும் பிரபலமானார்.
தற்போது ஜவான் படத்தில் ஷாரூகானுடன் முக்கிய ரோலில் நடித்து நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளார் ப்ரியாமணி. இந்நிலையில்தான் ஜவான் படத்தில் தான் இணைந்தது குறித்த சுவாரஸ்யமான சம்பவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் “ஒருநாள் எனக்கு ஒரு கால் வந்திச்சு. பிஆர் ஒருத்தர் பேசினார். ஒரு படத்துல கேரக்டர் ரோல் பண்ணனும். அட்லீதான் டைரக்டர்ன்னு சொன்னார். அட்லீ படம்னா ஓகேதான் எனக்கு பிரச்சினையில்லன்னு சொன்னேன். சார் உங்ககிட்ட உங்க கேரக்டர் பத்தி விரிவா சொல்லுவார்னு சொன்னார்.
எனக்கு வீடியோ கால் வந்துச்சு அதுல அட்லீ சார் இருந்தார். என்ன ப்ராஜெக்ட்னு எனக்கு தெரியாது. கூடவே ஆர்யாவும் இருந்தான். நீ என்ன இங்க பண்றேன்னு நான் ஷாக்கிங்கா கேட்டேன். இல்லை அட்லீ என் ஃப்ரெண்ட் சோ சும்மா வந்தேன்னு சொன்னான். அப்புறம் அட்லீ சார் என் கேர்க்டர் பத்தி சொன்னார்.
கடைசியாதான் படத்தில ஹீரோ ஷாருக்கான்னு சொன்னார். எனக்கு சர்ப்ரைஸா இருந்துச்சு. இதை முதல்லையே சொல்லிருக்கலாமே.. டாக்குமெண்ட்ல எங்க கையெழுத்து போடணும் சொல்லுங்கன்னு கேட்டேன்” என்று தனது நினைவுகளை பகிந்துள்ளார்.