Connect with us

விஜய் சேதுபதியின் இன்னொரு முகம்.. சொல்லவே பயமா இருக்கு..! பிக்பாஸ் குறித்த உண்மையை உடைக்கும் தர்ஷா குப்தா..!

vijay sethupathi darsha gupta

Bigg Boss Tamil

விஜய் சேதுபதியின் இன்னொரு முகம்.. சொல்லவே பயமா இருக்கு..! பிக்பாஸ் குறித்த உண்மையை உடைக்கும் தர்ஷா குப்தா..!

Bigg Boss Tamil season 8 is currently hosted by actor Vijay Sethupathi. It has received mixed reviews. At this stage, Bigg Boss contestant Darsha Gupta has said about Vijay Sethupathi hosting.

கடந்த ஏழு வருடங்களாக தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் கமலஹாசன்தான். அதனாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன்தான் நடத்தி வருகிறார் என்று பலரும் நம்பி வந்தனர்.

அந்த அளவிற்கு கமல்ஹாசனுக்கும் பிக்பாஸ்க்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. ஆனால் இந்த வருடம் கமல்ஹாசன் வேறு வேலை காரணமாக வெளிநாடு சென்றதால் இந்த முறை பிக் பாஸை விஜய் சேதுபதி தொகுத்து வருகிறார்.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதை பொறுத்தவரை அதற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு பக்கம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது நன்றாக இருக்கிறது என்று ஒரு சாரார் கூறினாலும் கூட இன்னொரு பக்கம் கமல் அளவிற்கு விஜய் சேதுபதிக்கு போட்டியாளர்களை கையாள தெரியவில்லை என்றும் பேச்சுக்கள் வருகின்றன.

விஜய் சேதுபதி குறித்து தர்ஷா குப்தா:

இந்த நிலையில் தர்ஷா குப்தா இது குறித்த சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது தர்ஷா குப்தா இந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 இல் போட்டியாளராக உள்ளே சென்றார். ஆனால் சில வாரங்களிலேயே அவர் வெளியே வந்து விட்டார்.

அவர் கூறும் பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடுவதை விட விஜய் சேதுபதியுடன் பேசுவது தான் கடினமாக இருந்தது. அவரிடம் பேசவே பயமாக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதி நம்மை என்ன சொல்ல போகிறாரோ? என்ற பயம் இருக்கிறது.

அவர் நம்மை பேசவே விடுவதில்லை என்று மிக வெளிப்படையாக தர்ஷா குப்தா கூறி இருக்கிறார். இதற்கு ஆதரவாகவும் ரசிகர்கள் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

shruthika
biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
To Top